CounteR

free html visitor counters

Monday, December 14, 2009

உறைந்த நொடிகள்



உறைந்த நொடிகள்



முத்து போன்ற சிரிப்பை
தொலைத்த உன்னிடம்
மீண்டும் பெற காத்திருக்கும்
என் புன்னகை...
காக்க வைத்தும் அழ வைக்கிறாய்
அழுது கொண்டே காத்திருக்கிறேன்
உனக்காக...
விடுகதை கூறும்
உன் மௌனத்திடம்
மண்டியிடுகிறேன்
கொடுத்துவிடு தண்டனை
சிறைச்சாலைகள் இங்கு இல்லை
உன் விழிகளே இங்கு சிறையாக...

உருகிய பனித்துளியாய்
உன்னை சுற்றி
தீவாகிறேன்...
ஆண்களை அதிகமாக
பிடிக்கவில்லை உனக்கு
அது பிடித்தது
உன்னிடம்...

நீ சூடும் பூக்கள் கூட
பறிக்கும் பொது
கடிக்கிறதே...
நீ சிணுங்கும்
நேரம் பார்த்து
காத்திருக்கிறேன்
நீண்ட அலகுடன்
கொக்கு போல...

உன்னைக்கண்ட
ஒவ்வொரு நொடியும் சரிய
உன் நினைவுகள்
மட்டும் மணல் மேடாய்
உயர்ந்து நிற்கிறதே...

நேரத்தை சேமிப்பதில்
நீ சிறந்தவள் தான்...
இணையக்கடிதத்தை அனுப்பாமல்
செமிப்பவள் நீ...
இணையம் இலவசம் தான்
மறந்துவிடாதே...
இலவசத்தின் மேல் ஆசைப்படாத
அழகிய பதுமையே...

காரணமின்றி சண்டையிட்ட
களைந்த அந்த நிமிடங்கள்
நினைக்கவும் சிறிது பயம் தான்
ஏனென்றால்
அடி வாங்கியது நான் மட்டுமே...

பயிர்களை பற்றி படிக்கும் உனக்கு
என் இதயத்தை படிக்க
ஏன் இல்லை ஆர்வம்...
அனுப்ப இயலவில்லை கடிதங்கள்
கணினியையும் கொஞ்சமுடியவில்லை
தொலைபேசியும் உன்னை கண்டு
பயந்துவிட்டது போல
விட்டது ஓடம் உன்னிடம் இருந்து...
என்னிடம் அனுமான்கள் இல்லை
தூது அனுப்ப...
வேண்டுமென்றால்
முயற்சிக்கிறேன் உன்
அக்காவிடம்...

அழுக மனமில்லை
அழுதால் உனக்கு பிடிக்காதென
அறிந்த பிறகு...
நெல் மணிகளை மதிக்கிறேன்
உழவனை
கடவுளாய் காண்கிறேன்
இவை அனைத்தும்
உணர வைத்தவள் நீ...

மேகம் கொண்ட மழை நீர்
பூமி தேடி விரைவதை போல
உன் பதில் தேடி விரைகிறேன்...
பேரில் மட்டும் ப்ரியம் கொண்ட
என் ப்ரியாவிற்காக...
இப்படிக்கு,
கிறுக்கன்...

Sunday, November 22, 2009

வார்த்தை இழந்த வார்த்தைகள்




வார்த்தை இழந்த வார்த்தைகள்

மறக்கவும் முடியவில்லை
மறுக்கவும் வழிகள் இல்லை
ஈடு இணைகள் ஏதும் இல்லை
செவிகளோ
உன் பெயரை சுமக்கவில்லை
உன்னால் எழுந்து விட்டேன்
என் சுயமும் நினைவும்
இத்தனையும்
நீ கூறிய அந்த ஒரு வார்த்தை
"என்ன மறந்துடாத டா !!!!".....

இனி உன் வார்த்தைகளை
கண்ணாடி மட்டும் படிக்குமே
தொலைபேசி குரலேடுக்குமே
வேண்டாம் இப்படி ஒரு
தண்டனை...

சிரித்துக்கொண்டே
அழ வைக்கிறாய்...
அழும்போது உன் கண்ணீரின்
நினைவலைகள்...
எனினும்
கவலைகள் இனி இல்லை...
என் கண்ணீரை துடைக்க
வந்து விட்டால் ஒரு தோழி...
மலைக்கோட்டையின் மலையரசி...

மொழி அறியா ஊரில்
புது மொழி
கற்றுகொடுத்து விட்டாய்...
இந்த மொழியில்
இலக்கணம் இல்லை
எல்லைகள் இல்லை
அளவுகள் இல்லை
அழுகு இல்லை
மூன்று இதயங்களின்
துடிப்பு மட்டுமே

ஐயத்துடன் கூறுகிறேன்
மொழி அறிய மனமில்லை
மறந்து விடுவேனோ...
நினைவூட்டுங்கள்
நம்மை மறந்துகொண்டே...

Saturday, October 3, 2009

பச்சைக் காஷ்மீர்


சாலையெங்கும்
மழை நீரின்
கிறுக்கல்கள்...

காவி நிறத்தில்
கவி பாடும்
கட்டிடங்கள்...

ஆடவர் உடையில்
அங்கயர் கன்னிகள்

சுடிதார் தேடும் மீசைகள்...

வழி எங்கும்
பச்சை நிறத்தில்
பரவசங்கள்...

தாண்டிச்செல்ல
மனமில்லாது வாடும்
விழிகள்...

திரும்பாதே
வேண்டுகிறேன்
கூந்தல் நிற சாலைகள்...

ஏதாவது
ஒரு வேலை
எனக்கிங்கு வேண்டும்...
என்
ஒவ்வொரு துளியும்
ஒரு இலை போல்
உதிர்வதை காண...

என் விழிகளோ
உறைந்து விட்டது
இன்று...

இது போல்
ஒரு பழ்கலைக்கழகம்
வேறு எங்கு உண்டு
தமிழகத்தில்,
வேளாண்மை பழ்கலைக்கழகம்
இதோ
கோவையில்
ஒரு
பச்சைக் காஷ்மீர்...

விடியல்

சுழன்று கொண்டிருக்கும்
கடிகார விழிகள்
சோர்வின்றி சிறகடிக்கும்
காத்தாடிகள்...

எனக்கும் கொஞ்சம்
உறக்கம் வேண்டும்
தொலைகாட்சி...

கண்களில் என்ன
தூசியோ
மூடிய விழிகளுடன்
மின் விளக்குகள்...

வெறித்த பார்வையுடன்
தொய்வு கண்ட
விரல்களின் இடுக்கில்
பேனா முனைகள்...

இவனன்றி என்
உலகம் தெளிவல்ல
மூக்கு கண்ணாடி...

மொபைல் வெளிச்சத்தில்
எழுத இடம் தந்த
நோட்டு புத்தகங்கள்...

நாடு இரவு நாயகர்களின்
பின்னணி இசை
ஒரே மொழியில்...

எங்கே அவள்
எங்கே அவள்
திரும்பி பார்க்கும்
காத்தாடி மேஜை...

தினமும்
தூக்கு தண்டனை
மாட்டிக்கொண்டிருக்கும்
சட்டைகள்...

தூங்காமல்
காத்துக்கொண்டிருக்கும்
இந்த விழிகளுக்கு
நான் என்ன கூற?

என் விடியல்
உன் விழிகளில் அல்லவா
வேண்டுகிறேன்
உன் இமைகளிடம்...

இப்படிக்கு
கிறுக்கன்...

அவளுக்கான நொடிகள்

கவிதை எழுத
இது நேரமல்ல
அவளுக்கான நொடிகள்
இது
எது கூற
அவளிடம்...

ஜன்னல் கம்பிகளை
பற்றிக்கொண்ட
விரல் நுனிகள்
ஒவ்வொரு துளியும்
நீயென
மழைத்துளிகள்...

நொறுங்கிய என்
இதயங்களை போல
இடிந்த கட்டிடங்கள்...

என்னை காண
ஓடி வந்த
வருணனின் பிள்ளைகள்
வருக பூமிக்கு...


சாலைகளோ
இன்று

தீவுகலாகின...

இரு விரல்களுக்கிடையில்
விளையாடிக்கொண்டிருக்கும்
பேனா முனைகள்...

கோஞ்சிககொண்டிருக்கும்
விசிறிக்காற்று
ஆறடி உருவில்
மீண்டும் தோழர்கள்
ஆசிரியர்கள்...

வார்த்தைகள் இன்றி
கவிதைகள் எழுத
நீ தான்
கற்றுக்கொடுத்தாய்...

இன்றோ
தாள் இன்றி
கவிதைகள் எழுதுகிறேன்
உன் இதழில்...

இப்படிக்கு

கிறுக்கன்...

கேளா வரங்கள்

அணையாத மெழுகுவர்த்தி
சுடாத நெருப்பு
பொய் கூரா பெண்கள்
உடையாத வளையல்கள்
அடக்கமான மாணவர்கள்
அமைதியான வகுப்பறைகள்
சுத்தமான சாலைகள்
அலறாத செல்போன்கள்
பார்வையற்ற ஓவியர்கள்
ஊமையான பாடகர்கள்
இவை மட்டும் போதும்
என் விழிகள்
இன்று மட்டும்
விழட்டும்

பிறப்பில் ஒரு மரணம்

என்
விழிகளை
வெறுக்கிறேன்
இன்று
எப்படி அவளை
விட்டுச்சென்றாய்

மீண்டும் விழ
ஆசைப்பட்டேன்
தவறிய பொது
பிடித்த உன் கைகள்

மரணத்தின் மடியை
மீண்டும் அழைக்கிறேன்
நீ அளித்த மாத்திரைகள்

கைதிகளுக்கு கூட
கடைசி ஆசை
நானோ இன்று
ஒரு கைதியாக

கடவுளே உன்னை அழைக்கிறேன்
என் படைத்தாய்
மீண்டும் என்
பிறப்பில் ஒரு மரணமா
மறு ஜென்மம் எனக்கு வேண்டாம்
இதற்கு மேல் ஷக்தி இல்லை

கதிரவனுக்கும் மயங்காத
ஒட்டகம்
நான் இன்றோ
தீக்குசிகளால்
அழகிய குளியல்
என் இரு கரு விழிகளில்

இப்படிக்கு
கிறுக்கன்

Friday, July 24, 2009

தரிசனம்

தரிசனம்

உனக்காக

காத்திருந்தேன்

ஒரு நிமிட தரிசனம்

நீ அளித்ததோ

ஒரு நொடி

மீண்டும் காத்திருக்கிறேன்

அந்த

ஒரு நொடிக்காக

ஒரு யுகம் கூட

கடந்து விடக் கூடும்...

உன் முகம் காண

ஏது கண்ணாடி

பாதரசம் கூட

வெட்கி

தலை குனிகிறதே...


உன் பாதம்

பட்ட இடங்கள்

கிருஷ்ண ஜெயந்தி

பாடுகிறதே...


நீ வீசிய

பூக்களை கூட

யாரும் மிதிக்காமல்

பார்த்துக்கொள்கிறேன்...

பூ போல

பார்த்துக்கொண்டாய்

என்னை

அதன் அர்த்தம்

இன்று உணர்கிறேன்

நான் ஒரு

வாடிய பூவென...


மீட்டு கொடுத்து விடு

என் சிரிப்பு

பெற்றுக்கொள்

என் கண்ணீர்

தானம் செய்து விடு

உன் துயரங்கள்...

தண்ணீரின் காரணி

நான்

இன்றோ

கண்ணீரில் கரைகிறேன்...

அறிவுள்ள பேதையாய்

வீரம் கொண்ட கோழையாய்

கண்கள் அற்ற ஓவியன் போல

உன்னை வரைகிறேன்...

உன் விழியில்

என் வரிகள்

வரி தவறி வழி தவறி

விழிகள் மேல்

விழத்தொடங்கினேன்...

விரல் இடுக்கில்

வித்தகு இதிகாசங்கள்

பகலில் நிலவை

காண சொல்கிறாய்

வெந்து கொண்டிருக்கும் நிலவோ

நட்சத்திரங்களிடம்

உதவி கேட்கிறது...

உன் மேல் விழுந்த

பனித்துளிகள் கூட

பூக்களை வெறுக்கிறதே

சாலைகளோ

வழி தேடுகிறதே

என் மூச்சில்

நிறைந்த ஸ்பரிசம் போல

உன்னுள் நிறைந்திருக்கிறேன்...

எழுதிகொண்டிருக்கிறேன்

இந்த வரிகளை

பூமியில் ஒரு சொர்க்கம்

இதோ...

இப்படிக்கு,

யசுவன் / கிறுக்கன்...

Wednesday, July 22, 2009

நானும் மனிதன் தான்



நானும் மனிதன் தான்

நானும்
மனிதன் தான்
கடவுள் இல்லை...

உன்னை
அறியாத ஒரு
முட்டாள் ஆகிவிட்டேன்...

உன் கண்களை காணும்
தைரியம் இல்லாத
ஒரு கோழை
ஆகி விட்டேன்...

என் கோபங்கள்
அனைத்தும்
கானல் நீர் தான்...

என் உயிர்
உன்னை விட
என் உணர்வுகள்
எனக்கு பெரிதல்ல...

இப்போது
என்னுடன் இருப்பது
தனிமை என்னும்
ஒரு தோழி மட்டுமே
உன்னையும் இழப்பதற்கு
இழப்பதற்கு நான் துறவி அல்ல...

நான் இழந்தது
உன்னை மட்டும் அல்ல
என்னையும் தான்
நீ இன்றி நான் ஏது...

என் மூச்சுக்காற்று
அல்லவா நீ
நீ இன்றி
என் உயிர் ஏது...

இங்கோ
நீ உடைத்தெறிந்த
சிம் கார்டுகள்
அவர்களிடம் என்ன சொல்வது...

தோழியே வந்து விடு
உயிர் இன்றி தவிக்கும் எனக்கு
உயிர் தானம் செய்து விடு...

முதலில் இழந்த
ஒரு விழியால்
இன்றோ
குருடன் ஆகிவிட்டேன்...

உன்னை கண்டால்
மறு விழியும்
விலகிடுமோ
சிறு பயம் மட்டுமே...

நீ அடித்தாலும்
பின்னால் திரியும்
நாய் குட்டி ஆகிவிட்டேன்...

வேலை இன்றி
திரிந்த எனக்கு
வேலை கொடுத்து விட்டாய்
வேலைஇன்மை
இங்கு இனி இல்லை...

என்னை செதுக்கி
நீ சிலை ஆகி விட்டாய்
உன்னால் இன்றோ
தமிழில் குளிக்கிறேன்...

என்
புன்னகையும்
நீயே
அழுகையும்
நீயே
கவலையும்
நீயே
கண்ணீரும்
நீயே
அப்போது
நான் எங்கே
உன்னிடம்
என்னை மறந்தேன்
பத்திரமாக வைத்துக்கொள்
என்னை உன்னிடம்...

உனக்கென
எழுதிய கடிதங்கள்
கவிதைகள் ஆகின...

அறியாத வார்த்தைகளை
அறிய தொடங்கினேன்
புரியாத மொழிகளோ
என்று என் கைவசம்...

இன்றோ
என்னை முழு கிறுக்கன்
ஆக்கி விட்டாய்...

இப்படிக்கு,
யசுவன் / கிறுக்கன்...

Tuesday, July 21, 2009

கைதி

மீண்டும் உங்கள் கிறுக்கனின் சிறு படைப்பு...

கைதி

குச்சிகளை இமைக்கவில்லை
பள்ளிகளில்
முதல்வரை இமைக்கவில்லை
கல்லூரியில்
முதன் முறை ஒரு ஐயம்
உன் விழிகளை காணும் பொது
ஏன் என்று அறியவில்லை
உன் விழிகளில் மட்டும்
ஒரு அதிசயம்
என் உதடுகள் ஏனோ
மவுன வரிகள் வாசிக்கிறது...

இதற்கு பெயர்தான் விழிஈர்ப்பு விசையோ
அறிவியல் என்றுமே உண்மை தான்
உணர்கிறேன் இன்று...

என்ன ஆனது தெரியவில்லை?
தயவு செய்து கூறி விடு
உன் விழிகளை
வெற்றி பெரும் அளவுக்கு
நான் வீரன் இல்லை
அனால் உன் விழிகள் முன்
தினம் தினம் தோற்கும் அளவுக்கு
பலமும் என்னிடம் இல்லை...

நான் உள்ளங்களை மட்டும் திருடுபவன்
பிடித்து விடாதே
விட்டு விடு உன் விழிச்சிறையில் இருந்து
வேண்டுகிறேன் அடுத்த பிறவியில்
நீ கொண்டு செல்லும் புத்தகங்களாக
இருக்க கூடாதா என...

நீ திரும்பும் அந்த ஒரு நொடிக்காக
காத்திருக்கின்றேன்
பல கோடி நிமிடங்கள்
நீ அருந்தும் கோப்பைக்காக
காத்திருக்கிறேன்
கல்லூரி உணவகத்தில்...

உன் கால் வழிதடங்கள்
என் பாதைகள் ஆகின
இந்த வருடம் மழை இல்லை
உன்மேல் விழ இந்த
மழைத்துளிகளுக்கு
கூட வெட்கமோ...

இனி உயிர் வாழ
என்னால் முடியவில்லை
கத்தியை பிடித்தேன்
காயம் கண்ட உன் விரல்கள்
மருந்துகளை நீவினேன்
காய்ச்சல் கொண்ட அந்த நாட்கள்
இதோ பேருந்துகள்
அதிலும் நீ சென்ற நினைவுகள்...

இப்படி ஒரு வாழ்கை
செத்துக்கொண்டே வாழ்கிறேன்
எனக்கு வேறு வழி தெரியவில்லை
மன்னித்துவிடு மறந்துவிடாதே...

நீ காணும் அந்த ஒரு நொடி
உறைந்தால் என்ன
நீ வீசிய காகித துண்டுகளோ
காவியம் பாடுகின்றன
நீ அமர்ந்த மேசையோ
மாற்றானுக்கு மறுக்கிறது...

கல்லூரி வளாகம் எங்கும்
இதோ உன் வாசங்கள்
தயவு செய்து மூடிவிடு
உன் முகத்தை
கண்டுகொள்வான் பிரம்மன்...

இதோ அனாதை ஆகிவிட்டேன்
என் சொந்தங்களுடன்...

இப்படிக்கு,
யசுவன் / கிறுக்கன்...

வலிகள் கொடுத்த வரிகள்

(வலிகள் கற்றுக்கொடுத்த வரிகள்...கருப்பு நிற எழுத்து வடிவில் என் கண்ணீர்துளிகள்...இதோ ஒரு கருப்பு ரோஜவிற்காக...ஒரு கிறுக்கனின் படைப்பு...இவை என் விரல்கள் நறுக்கிய ஒரு உண்மை படைப்பு...தவறேதும் இருப்பின் மனிக்கவும்...)

என் கருப்பு தேவதையே
உன் விழியின் வலிகளை
என் கண்களில் காண்கிறேன்...

என்னை அங்கே காண முடியாமல்
இப்போது உன் கருவிழிகளில்
பிணமானேன்
புதைத்து விடாதே அதற்குள்
மீண்டும் எழுவேன்...

இப்போது இங்கு எவரும் இல்லை
உன்னை தவிர
ஒரு அழகிய பதவி
உனக்கென...

கவிதை எழுத மறந்தேன்
மூன்றெழுத்து கவிதை
உன் பெயர் மட்டும் வாசிக்க...

அடித்தாலும் கடித்தாலும்
என்னவள் நீ என்றும்
எனக்கு சிறு குட்டி தான்
உன் வெறி அடங்க எது மருந்து?
என் உயிர் போதுமா...

நானும் பதவி வெறியன் தான்
அடிமை,தமையன்,தோழன்
யார் தருவார்
இத்தனை பதவிகள்...

திடீரென ஒரு புது அவதாரம்
அதிலோ என் உருவம் இல்லை
அதனால் விலகினேன்
விழிகளின் முன்னாள்
நொறுங்கிய கண்ணாடி போல...

அந்நியர்களுக்கு மட்டும்
இதயத்தில் இடங்கள்
என்ன பாவம் செய்தேன்
அடியேன்

காத்திருப்பேன் மீண்டும்
நான் உலகாய் நினைத்த
ஒருத்தி என்
உலகத்தை மறந்தாலும்
இந்த உலகம்
உனக்கெனவே சுழல்கிறது
மறந்து விடாதே
மீண்டும் சுலற்றாதே
என் கண்களை...

உதட்டில் மட்டுமே
என் பெயர் பதிவுகள்
இல்லை இதயத்தில்
காத்துக்கொண்டிருக்கிறேன்
இதய பயணத்திற்கு...

புத்தகங்கள் பேனாக்கள்
அழுகின்றன
உன் ரேகைகள்
பதம் பார்க்க
அதற்காவது அருள் கொடு...

விரைவில் வந்து விடு
என் அவதாரம் மாறுவதற்குள்
அல்லது
காத்துக்கொள்
உன் உறவுகளையாவது...

நீ தனி மரமாக நிற்க
எதற்கு இத்தனை விழுதுகள்
உன் சொந்தங்கள்...

அழகிய ரோஜாக்கள்
மூன்றிலும் இன்று
கண்ணீர் துளிகள்
இதை ஏந்திய என் கைகளோ
சிவப்பின் அடையாளமாய்
கண்ணீரை துடைக்க
முட்கள் அளித்த முத்தத்தில்
கைகளில் ஈரங்கள்...

இந்த உள்நாட்டு போரில்
நான் மட்டும்
அகதியானேன்
கரை இல்லா தீவில்
இடம் தேடி அலைகிறேன்
நானும் போராளி தான்
கொன்றுவிடு...

செல்லமாக அடி வாங்கிய
அந்த அழகான நாட்கள்
இன்றோ
தொலைத்துவிட்டேன்
இதோ
தேடிக்கொண்டிருக்கின்றேன்
தொலைத்த இடம்
மட்டும் அறியவில்லை...

நீயோ இந்த வரிகளை
வாசிக்கிறாய்
ஆனால் இந்த வரிகளோ
நம்மை வாசிக்கின்றன...

நீயும் நிலவும்
ஒன்று தானோ
சில நேரங்களில் மட்டுமே
சிரிக்கிறாய்
உண்மையில் என்னை விட்டு
மறைகிறாய்...

இதையாவது உன்னுடன்
வைத்துக்கொள்
என் இதயத்தை வீசியது போல்
இக்கடிததையும்
இன்னொருவனுக்கு வீசி விடாதே...

பிடிக்கவில்லை
என் புதிய அவதாரம்
ஆனால் மாறி விட்டேன்
இதோ உன்னால்...

காலம் தாண்டி
வந்து விடாதே
என் உலகம்
இப்போதும் இருளில்
என் விழிகளோ
இன்றும் உன்னிடமே...

இப்படிக்கு,
கிறுக்கன்...