CounteR

free html visitor counters

Sunday, May 9, 2010

என்ன செய்தாய் என்னை நீ


எனக்கு தெரியும்
இதைதான் நீ எதிர்பார்த்தை
கொல்லாமல் கொன்று விட்டாய்
பார்வைகளை பறித்து என் நெஞ்சத்தை
தின்று தீர்த்தாய்

என்னுள் உன்னை துளைத்து விட்டாய்
இருந்தும்
கண்களில் உன்னை அடைத்து விட்டேன்
சுவாச மூச்சாய் நிறைந்து விட்டேன்
உன் விழிகளில் என் முகவரி
தொலைத்து விட்டேன்

இவை யாவும் எவரும் எழுத முடியும்
பெரிதாக நீ என்ன செய்து விட முடியும்
என்னை நீ?

Saturday, March 27, 2010

என்னுள் ஒரு அங்காடி



கவிதைகள் கூட
தர்ணா செய்ய தொடங்கி விட்டன
சில மாதங்களாக என் மனதில்
அச்சிறை இன்று தான் கண் திறந்தது...

சிறை கண்ட கண்கள்
சாலை காணும் பொது
சாரல் கொண்ட ஓர் துள்ளல் காணும்
மலைதேக்கம் மனதின் ஓரத்தில்
மீண்டும் தெரிந்தது...

வாங்க சார் வாங்க சார் என
விற்கும் பொது அடித்த கிண்டல்கள்
செய்த அலட்சியங்கள்
கண்கள் மூட மனம் இல்லை...

அவர்களுக்கும் மனம் உண்டு
ரதம் சதை இவையுண்டு
இவர் மனம் தொலுரித்துக்காட்டிய
ஒரு திரைக்குப்பின்
எழுதாத என் வரிகளுக்கு
உயிர் இருந்தும் நான் என்ன சொல்ல
நன்றி வசந்த பாலன்...

என் சிறைக்கவிதைகளுக்கு
விடுதலை இன்று முதல்
ஆனால் நீங்கள் என் மனசிறையில்
கவலை வேண்டாம்
என் மனத்திலும் உண்டு
ஒரு அங்காடித் தெரு....

இப்படிக்கு,
கிறுக்கன் ....

Thursday, February 18, 2010

சமத்துவப்பள்ளி


கேரள மண்ணில்
இரு நாள் கண்ட சொர்க்கம்
மறு நாள் இரவில் தொலைய
இரயில் பயணம் கேட்ட
என் விழிகளுக்கு பதில் கூற
வழி இன்றி
கட்டி விட்டேன் மூட்டையை...

இரயிலோ என் தோழியையும்
விஞ்சி விட்டது
அவள் கூட விரைந்து விடுவாள்
என்னைகான...

மறு அழைப்பு

என்ன ஒரு பிறவி நான்
அந்நிய மாநிலத்தில் தான்
தாயின்  நினைவு வர...

சென்னையின் பயணசீட்டை
கிழித்தெறிந்து
உடன் வந்த தோழனுக்கோ
கையசைவுடன் வழியனுப்பி
சொந்த மண் தேடி விரைந்து வந்தேன்...

காற்றின் மதுவோ விடிந்தும்
என்னை மயக்க
தாண்டிய  என் ஊருடன்
பேருந்தில் இருந்து
துரத்தப்பட்டேன்... 

Monday, February 8, 2010

சொகுசு பேருந்து


இரண்டு மணிநேரம்
பயணமே
கிளைத்த என் வாரங்களை
முடிவு செய்தன...

மாற்றிக்கொண்டேன் நொடிக்கொரு இருக்கை
வெயிலுக்கு பயந்து
இருந்தும் சிக்கிக்கொண்டேன்
நடத்துனரின் அர்ச்சனையில்
செவிகளை மடக்கி அமர்ந்தேன் ஓரிடத்தில்...

முற்பது ருபாய் என் பயணத்தை முடிவு செய்தது
சென்னை என் கைக்குள் வந்தது
நரகமாகிய சொர்க்கம்
அன்றில் இருந்து
இனிக்கத்தொடங்கியது...


விடியாத இரவு



வேறென்ன செய்ய
இரவும் பகலும்
மாறி மாறி
உன்னை நினைவூட்ட..

நீ சிரித்த பொது அழகிய நிலவும்
தன்னை மறந்து
விழுந்து விடலாம்
சிவந்த உன் கன்னங்கள்
சூரிய குடும்பத்தில்
ஒரு கடைக்குட்டி போல...

நானோ உன் போல அல்ல
என்னிடம் அடிமைகள் என
எவரும் இல்லை
உன்னை போல...


முதியவன்

 ஒரு நாளில்
முதியவன் ஆகி விட்டேன்
இன்று காலை
விபத்திற்குப் பிறகு...

பொறுமை கவனம்
நிதானம் அர்த்தம்
என அனைத்தும்
என் சட்டைப்பைகளில்...

கூடிய விரைவில் அவை
வெளி நடப்பு செய்யலாம் 
நான் குணமடைந்தால்...

இப்படிக்கு,
கிறுக்கன்...