CounteR

free html visitor counters

Friday, July 24, 2009

தரிசனம்

தரிசனம்

உனக்காக

காத்திருந்தேன்

ஒரு நிமிட தரிசனம்

நீ அளித்ததோ

ஒரு நொடி

மீண்டும் காத்திருக்கிறேன்

அந்த

ஒரு நொடிக்காக

ஒரு யுகம் கூட

கடந்து விடக் கூடும்...

உன் முகம் காண

ஏது கண்ணாடி

பாதரசம் கூட

வெட்கி

தலை குனிகிறதே...


உன் பாதம்

பட்ட இடங்கள்

கிருஷ்ண ஜெயந்தி

பாடுகிறதே...


நீ வீசிய

பூக்களை கூட

யாரும் மிதிக்காமல்

பார்த்துக்கொள்கிறேன்...

பூ போல

பார்த்துக்கொண்டாய்

என்னை

அதன் அர்த்தம்

இன்று உணர்கிறேன்

நான் ஒரு

வாடிய பூவென...


மீட்டு கொடுத்து விடு

என் சிரிப்பு

பெற்றுக்கொள்

என் கண்ணீர்

தானம் செய்து விடு

உன் துயரங்கள்...

தண்ணீரின் காரணி

நான்

இன்றோ

கண்ணீரில் கரைகிறேன்...

அறிவுள்ள பேதையாய்

வீரம் கொண்ட கோழையாய்

கண்கள் அற்ற ஓவியன் போல

உன்னை வரைகிறேன்...

உன் விழியில்

என் வரிகள்

வரி தவறி வழி தவறி

விழிகள் மேல்

விழத்தொடங்கினேன்...

விரல் இடுக்கில்

வித்தகு இதிகாசங்கள்

பகலில் நிலவை

காண சொல்கிறாய்

வெந்து கொண்டிருக்கும் நிலவோ

நட்சத்திரங்களிடம்

உதவி கேட்கிறது...

உன் மேல் விழுந்த

பனித்துளிகள் கூட

பூக்களை வெறுக்கிறதே

சாலைகளோ

வழி தேடுகிறதே

என் மூச்சில்

நிறைந்த ஸ்பரிசம் போல

உன்னுள் நிறைந்திருக்கிறேன்...

எழுதிகொண்டிருக்கிறேன்

இந்த வரிகளை

பூமியில் ஒரு சொர்க்கம்

இதோ...

இப்படிக்கு,

யசுவன் / கிறுக்கன்...

1 comment:

SPT ARASU said...

saadhaarana kirukkal alla idhu urukkamaana+nerukkamaana kirukkal
all d best,
arasu.