CounteR

free html visitor counters

Thursday, February 18, 2010

சமத்துவப்பள்ளி


கேரள மண்ணில்
இரு நாள் கண்ட சொர்க்கம்
மறு நாள் இரவில் தொலைய
இரயில் பயணம் கேட்ட
என் விழிகளுக்கு பதில் கூற
வழி இன்றி
கட்டி விட்டேன் மூட்டையை...

இரயிலோ என் தோழியையும்
விஞ்சி விட்டது
அவள் கூட விரைந்து விடுவாள்
என்னைகான...



உனக்கென நான் மூணாம் நபர் தானே
உனக்கென நான் காத்திருந்த
ஒவ்வொரு நொடியும்
வகுப்புகளாக ஆயின
சமத்துவப்பள்ளியாக  தெரிந்தது
ரயில்நிலையம்...
 
ஏழை பணக்காரன் பாகுபாடு
இங்கு இல்லை
நடைமேடையில், முன்பின்
பெட்டிகளில்...

ஜன்னல் கம்பிகளை ஒட்டிக்கொண்ட
அந்த நேரத்தில் பழைய நினைவுகள்
மரங்கள் போல என்னைக்கடந்து
செல்கிறது
பார்த்தும் தொட முடியாத
பாவியாய் அதன் முன் வலுவின்றி நிற்கிறேன்

எனினும்     
இன்று ஒரு நாள் மட்டும்
கதாநாயகன் நான்
என் அருகில் இரு சுடிதார்கள்...

விடியாத இரவு நோக்கி
பிரிந்த இரு
தண்டவாளங்களுடன்களுடன்
சேர்ந்தே செல்கிறேன்
"ஏற்காடு எக்ஸ்பிரஸ் "

இப்படிக்கு,
கிறுக்கன்...

No comments: