
இரண்டு மணிநேரம்
பயணமே
கிளைத்த என் வாரங்களை
முடிவு செய்தன...
மாற்றிக்கொண்டேன் நொடிக்கொரு இருக்கை
வெயிலுக்கு பயந்து
இருந்தும் சிக்கிக்கொண்டேன்
நடத்துனரின் அர்ச்சனையில்
செவிகளை மடக்கி அமர்ந்தேன் ஓரிடத்தில்...
முற்பது ருபாய் என் பயணத்தை முடிவு செய்தது
சென்னை என் கைக்குள் வந்தது
நரகமாகிய சொர்க்கம்
அன்றில் இருந்து
இனிக்கத்தொடங்கியது...
உறங்கவோ மனமில்லை
ஜன்னலோரம் சிலிர்ந்த காற்று
என்னிடம் ஏதோ
சொல்லிக்கொண்டு உரச
அடுத்த பேருந்தில்
மீண்டும் சண்டை
ஜன்னலோரம் வேண்டுமென...
பைத்தியமானேன் பேருந்தில் சுற்ற
சொகுசு பேருந்து எனக்கு சொர்க்க வாசலானது
எப்.எம் பாடல்கள் என் மொழிகலாகின
என் வரிகலாகின...
மொழிகளை
துவைத்துக் கொண்டிருக்கிறேன்
சாரலில் நிறம் போக...
இப்படிக்கு,
கிறுக்கன்...
No comments:
Post a Comment