
கவிதைகள் கூட
தர்ணா செய்ய தொடங்கி விட்டன
சில மாதங்களாக என் மனதில்
அச்சிறை இன்று தான் கண் திறந்தது...
சிறை கண்ட கண்கள்
சாலை காணும் பொது
சாரல் கொண்ட ஓர் துள்ளல் காணும்
மலைதேக்கம் மனதின் ஓரத்தில்
மீண்டும் தெரிந்தது...
வாங்க சார் வாங்க சார் என
விற்கும் பொது அடித்த கிண்டல்கள்
செய்த அலட்சியங்கள்
கண்கள் மூட மனம் இல்லை...
அவர்களுக்கும் மனம் உண்டு
ரதம் சதை இவையுண்டு
இவர் மனம் தொலுரித்துக்காட்டிய
ஒரு திரைக்குப்பின்
எழுதாத என் வரிகளுக்கு
உயிர் இருந்தும் நான் என்ன சொல்ல
நன்றி வசந்த பாலன்...
என் சிறைக்கவிதைகளுக்கு
விடுதலை இன்று முதல்
ஆனால் நீங்கள் என் மனசிறையில்
கவலை வேண்டாம்
என் மனத்திலும் உண்டு
ஒரு அங்காடித் தெரு....
இப்படிக்கு,
கிறுக்கன் ....